பதிவு செய்த நாள்
10
ஏப்
2019
12:04
போடி:போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்று விழா நேற்று அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது.
காலை 7:35 மணியளவில் போடி பெரியாண்டவர் கோயிலில் சிறப்பு பூஜையுடன் துவங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கொடிமரம் ஊர்வலமாக பரமசிவன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. காலை 10:30 மணியளவில் கோயிலில் கொடியேற்றப்பட்டது. சிவனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சுவாமி அலங்காரம், சிறப்பு பூஜைகளை அர்ச்சகர்கள் சுந்தரம், பரமசிவம் செய்திருந்தனர். தக்கார் பாலகிருஷ்ணன், செயலாளர் பேச்சிமுத்து, பொருளாளர்கள் முத்துராஜ், குணசேகரன், ஜெயபால், துணைச்செயலாளர் ஆறுமுகம், கைலாசநாதர் கோயில் அறங்காவல் குழு தலைவர் ஜெயபிரதீப், ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளி செயலாளர் செல்வராஜ், வர்த்தகர்கள் சங்கம் மற்றும் அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சித்திரை திருவிழா ஏப். 15 ல் துவங்கி 22 வரை நடக்கிறது.