அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2019 12:04
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழாவில் இன்று அக்னிசட்டி ,நாளை பூக்குழி நடக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
இக்கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதி உலா வந்து அருள் பாலித்தார். ஒன்பதாம் நாளான நேற்று பொங்கல் விழா நடந்தது. ஏராளமான பெண்கள் பக்தியுடன் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். தினமும் கோயிலின் முன்பு உள்ள கொடி மரத்திற்கு புனித நீரால் பக்தர்கள் அபிஷேகம் செய்தனர். இன்று நடக்கும் அக்னி சட்டி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்கினி சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்துவர். நாளை அதிகாலை பக்தர்களால் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர்சுதாகர் தலைமையில் உறவின் முறை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.