பதிவு செய்த நாள்
10
ஏப்
2019
03:04
குளித்தலை: அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா இன்று (ஏப்., 10ல்) துவங்குகிறது. தேர்தல் அன்று, தேரோட்டம் நடக்கிறது.
குளித்தலை அடுத்த அய்யர்மலையில், பிரசித்தி பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா, இன்று (ஏப்., 10ல்)தொடங்கி, 23 வரை நடக்கிறது. காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இக்கோவிலில், திருவிழா துவங்கியபின், சுவாமிக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்து, இரவில் பல்லக்கு ஊர்வலம் நடக்கும். வரும், 18ல், தேர்தல் அன்று காலை தேரோட்டம் நடக்கவுள்ளது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் பங்கேற்பர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.