பதிவு செய்த நாள்
10
ஏப்
2019
02:04
கரூர்: தான்தோன்றிமலை முத்து மாரியம்மன் பூக்குழி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கரூர் அருகே, தான்தோன்றிமலையில், பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.
அதில், ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடக்கிறது. நடப்பாண்டில், கடந்த மார்ச், 31ல் கரகம் பாலித்தலோடு விழா துவங்கியது. அதை தொடர்ந்து தினமும் சிறப்பு அலங்காரத் தில் அம்மன் திருவீதி உலா, மண்டகப்படி நிகழ்ச்சிகளும், நேற்று முன்தினம் (ஏப்., 8ல்) காலை தேரோட்ட மும் நடந்தது. நேற்று (ஏப்., 9ல்) விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நடந்தது. அதில், பக்தர்கள் பயபக்தியுடன் இறங்கி, நேர்த்திக் கடன் செலுத்தினர். பிறகு, பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து, அலகு குத்திக்கொண்டு, கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.