புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் ஒன்றியம், கண்ணூர்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா, பங்குனி மாதத்தில் நடைபெறும். கடந்த, 27ல் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.
தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. விழாவின் முதல் நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம் (ஏப்., 8ல்) இரவு மாரியம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (ஏப்., 10ல்) காலை பொங்கல் வைத்து, கிடா வெட்டும் நிகழ்ச்சியும், மாலை, பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை 11ல் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 13ல் மஞ்சள் நீர் விழா நடக்கிறது.