பதிவு செய்த நாள்
10
ஏப்
2019
03:04
நாமக்கல்: தொட்டிப்பட்டி, சாய் தபோவனத்தில் சாயி, ராமர் ஜெயந்தி விழா நாளை (ஏப்., 11ல்) துவங்குகிறது.
நாமக்கல் -பரமத்தி சாலை, வள்ளிபுரம் அடுத்த, தொட்டிப்பட்டியில் சாய் தபோவனம் அமைந்துள்ளது.
வியாழன்தோறும், சிறப்பு ஆரத்தி நடக்கும். சாயிபாபாவின் ஜெயந்தி விழா மற்றும் ராம நவமி கொண்டாடப்பட உள்ளது. அந்த விழா, நாளை (ஏப்., 11) காலை, 9:00 மணிக்கு கொடியேற்றத் துடன் துவங்குகிறது.
தொடர்ந்து சாயி சத்சரிதம் பாராயணம், 12 காலை, 10:00 மணிக்கு பாராயணம், 11:00 மணிக்கு பூ அலங்காரம் செய்யப்படுகிறது. ஏப்., 13 காலை, 5:30 மணிக்கு காலை ஆரத்தி, 7:00 மணிக்கு
அபிஷேகம், ஆரத்தி, 8:45 மணிக்கு சாவடி பாபா பூஜை, துவாகாமாயி பாபா பூஜை, 10:00 மணிக்கு சாயி நாம ஜெபம். 11:30 மணிக்கு மதியம் ஆரத்தி, கூட்டுப் பிரார்த்தனை, தொடர்ந்து சாயி நாம ஜெபம், பஜன் ஆகியவை நடக்கிறது.
மாலை, 5:30 மணிக்கு நைவேத்தியம், ஆரத்தி, 6:15 மணியளவில் மாவிளக்கு பூஜை, இரவு, 7:45 மணிக்கு ஆரத்தி நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு, ஷீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றத்தினர் செய்துள்ளனர்.