பதிவு செய்த நாள்
10
ஏப்
2019
03:04
விழுப்புரம்:ஆனத்தூர் கிராமத்தில் ராமலிங்கேஸ்வரர், லட்சுமிநாராயணபெருமாள், முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (ஏப்., 10ல்) நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த ஆனத்தூர் கிராமத்தில் எழுந்தருளி யிருக்கும் கலிவரத விநாயகர், தேனாம்பிகா சமேத ராமலிங்கேஸ்வரர், கனகவல்லிநாயகா சமேத லட்சுமிநாராயணபெருமாள், ஆஞ்சநேயர், யுதிஷ்டிரபீமார்ஜுன நகுல சகாதேவ சமேத திரவுபதி, முத்துமாரியம்மன், பிடாரியம்மன், கெங்கையம்மன் சுவாமிகளுக்கான கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று (ஏப்., 10ல்) நடத்தப்படுகிறது.
அனுக்ஜை, அங்குராற்பனம், வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி மற்றும் முதல் கால பூஜை நடத்தி விழா துவங்கியது. இன்று (ஏப்., 10 ல்) காலை 6 மணிக்கு கலிவரத விநாயகர், தேனாம்பிகா சமேத ராமலிங்கேஸ்வரர், பிடாரியம்மன் சுவாமிகளுக்கு புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.காலை 10 மணிக்கு கனகவல்லிநாயகா சமேத லட்சுமிநாராயண பெருமாள், ஆஞ்சநேயர், யுதிஷ்டிரபீமார்ஜுன நகுல சகாதேவ சமேத திரவுபதி, முத்துமாரியம்மன் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகமும் நடத்தப்படுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு சீதேவி-பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருக்கல்யாணமும், 8 மணிக்கு அனைத்து உற்சவமூர்த்திகளின் திருவீதியுலாவும் நடத்தப்படுகிறது.விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.