பதிவு செய்த நாள்
11
ஏப்
2019
02:04
திருப்பூர்: அலகு மாரியம்மன் பொங்கல் விழாவையொட்டி, பறவை காவடி எடுத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.திருப்பூர் தாராபுரம் ரோடு, டி.எம்.சி., காலனி அலகு மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடந்து வருகிறது.
கடந்த, 2ம் தேதி பூச்சாட்டு, 7 ம் தேதி கருப்பராயன் கிடா வெட்டு, 8 ம் தேதி நொய்யலில் இருந்து கம்பம், பால்குடம் எடுத்துவரும் நிகழ்ச்சி, 9ம் தேதி, நொய்யல் நதியில் இருந்து அம்மன் பவனி வரும் நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று (ஏப்., 10ல்), படைக்கல ஜோடனையுடன், அலகுமாரி யம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன பொங்கல், மாவிளக்கு ஊர்வலத்தை தொடர்ந்து, 30ம் ஆண்டு அலகு குத்தும் விழா நடந்தது.
பக்தர்கள் பறவை காவடியில் வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (ஏப்., 11ல்) மஞ்சள் நீர் விழாவும், நாளை மறுபூஜை, அன்னதானம் நடைபெற உள்ளது.