திருப்பூர் மாரியம்மன் கோவிவில் பொங்கல் பூச்சாட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2019 02:04
திருப்பூர்:சாமளாபுரம், கருகம்பாளையத்தில் உள்ள பட்டத்தரசியம்மன் மற்றும் ஆற்காட்டு மாரியம்மன் கோவிவில் பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த வாரம் காப்பு கட்டுடன் துவங்கியது.முதல் நாள் பட்டத்தரசி அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் மற்றும் பொங்கல் வைப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்னதினம் (ஏப்., 9ல்) ஆற்காட்டு மாரியம்மனுக்கு மாவிளக்கு மற்றும் பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. நேற்று (ஏப்., 10ல்) திருக்கல்யாண உற்சவம் முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் திருவீதியுலா ஆகியன நடந்தன.