பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2019 03:04
பண்ருட்டி:வீரட்டானேஸ்வரர் கோவிலில் சித்திரை உற்சவம் நடந்தது.பண்ருட்டி திருவதிகை யில் அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை நட்சத்திரத்தை ஒட்டி வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று 10ம் தேதி மாலை வசந்த உற்சவம் துவங்கியது. வசந்த உற்சவம் வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கோவில் நாயகர் வில்லேந்திய (சிவபெருமான்) திரிபுர சம்ஹார மூர்த்தி, திரிபுரசுந்தரியுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவை முன்னிட்டு, நேற்று (ஏப்., 10ல்) முதல் 10 நாட்களுக்கு, தினமும் மாலை 6:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகிக்கும், உற்சவர் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை விசேஷ பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் திரிபுர சம்ஹாரமூர்த்தி, திரிபுர சுந்தரியுடன் வசந்த மண்டபம் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை வசந்த மண்டபத்தில் திரிபுர சம்ஹார மூர்த்தி எழுந்தருளும் ஐதீக நிகழ்ச்சி என்பதால் சிறப்பு வழிபாடு நடக்கிறது.