ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வசந்த உற்ஸவம் விழா துவங்கியது.
இதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை குறடுமண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சந்தனகாப்பு அபிஷேகம் , பூஞ்சட்டை அணிந்து சிறப்பு பூஜைகளை ராஜாபட்டர் நடத்தினார். மழை பெய்து நாடு செழிக்க பிரார்த்திக்கபட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தினமும் காலையில் சந்தனகாப்பு அபிஷேகம், மாலையில் வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளல் நடக்கிறது. தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் , பட்டர்கள் ,மணியம் கோபி, ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமஷே் பங்கேற்றனர்.