பதிவு செய்த நாள்
12
ஏப்
2019
12:04
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, பி.அக்ராஹாரம் பகுதியில் உள்ள, செல்வசக்தி, விநாயகர், முத்துவேடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, கடந்த, 3ல், கொடியேற்றம், பாலிகை இடுதல் மற்றும் கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 9ல், காலை, 10:30 மணிக்கு, முதல்கால யாக பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. மாலை 4:30 மணிக்கு, தீர்த்தக்குடம் எடுத்தலும் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை, 7:00 மணிக்கு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு, 9:00 மணிக்கு, சிறப்பு நாடகம் நடந்தது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்திருந்தனர்.