ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2019 12:04
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில், சித்திரை திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் விமரிசையாக நடக்கும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
முன்னதாக நேற்று முன்தினம் மிருத்சங்கிரகனம், அங்குரார்ப்பணம், விஷ்வக்சேனர் வீதி புறப்பாடு நடந்தது.நேற்று காலை, மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அர்ச்சனைகள் நடந்தது. பின்னர் கொடியேற்றம் நடந்தது. பத்து நாட்கள் நடக்கும் சித்திரை விழாவில் முக்கிய நிகழ்வாக நாளை இரவு தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.வரும் 14ம் தேதி சேஷ வாகனம், 15ம் தேதி அனுமந்த் வாகனம்,16ம் தேதி யானை வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. 17ம் தேதி காலை 6 மணிக்கு தேர் திருவிழா, 18ம் தேதி குதிரை வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது. 19ம் தேதி மதியம் மட்டையடி உற்சவமும், அன்று இரவு நித்திய புஷ்கரணி திருக்குளத்தில் தெப்பல் உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து 20ம் தேதி இரவு கொடியிறக்கம் நடக்கிறது. 21 முதல் 26ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் ஆய்வர் சீனிவாசன், செயல் அலுவலர் மதனா மற்றும் முக்கிய பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.