ஆண்டிபட்டி கதலிநரசிங்கப்பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2019 12:04
ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கோயில் மிகவும் பழமையானது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான விழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று (ஏப்., 11ல்) நடந்தது. காலையில் கோயிலில் வாஸ்து சாந்தி செய்யப்பட்டு கருட பட்டம் கொண்டு வரப்பட்டு கொடி மரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. தினமும் கதலிநரசிங்கப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஏப். 17-ல் திருக்கல்யாண நிகழ்ச்சியும்,ஏப்ரல் 20, 21 ல் தேரோட்டமும் நடைபெறும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை சார்பில் செயல் அலுவலர் அருள்செல்வன், தக்கார் சந்திரசேகரன் முன்னிலையில் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.-