பதிவு செய்த நாள்
12
ஏப்
2019
12:04
உடுமலை:உடுமலை, மாரியம்மன் கோவிலில், தேரோட்ட திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் துவங்கியுள்ளன.
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களின் காவல் தெய்வமாய், எல்லையில் வீற்றிருக் கும் மாரியம்மன் தேரோட்டத்திருவிழா, கடந்த 9ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் கோலா கலமாய் துவங்கியுள்ளது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கம்பம் நடுதல், 16ம் தேதி இரவு, 8:30 மணிக்கு நடக்கிறது. அன்று முதல், கோவிலில் நாள்தோறும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து, 19ம் தேதி கொடியேற்றம் மற்றும் அன்று மதியம் பூவோடு ஆரம்பமாகிறது. திருக்கல்யாண உற்சவம் வரும் 24ம் தேதியும், 25ம் தேதி திருத்தேரோட்டமும் நடக்கிறது.
கம்பம் நடுதலைத்தொடர்ந்து, நாள்தோறும், பக்தர்கள் கூட்டமும் அதிகரிக்கும். 16ம் தேதி முதல் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன், சிறப்பு பூஜை நடக்கிறது. மாலையில் கோவில் வளாகத்தில், பக்தி இன்னிசை, பட்டிமன்றம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. திருவிழாவையொட்டி, பக்தர்களின் வசதிக்காக கோவில் முன்னேற்பாடு பணிகள் துவங்கியுள்ளன.
கோவில் வளாகத்தில், தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, வரிசை அமைக்கும் பணிகளும் நடக்கிறது. கம்பம் நடுதலுக்கு முன்பு, திருத்தேர்
தூய்மைப்படுத்தும் பணிகளையும் நிறைவு செய்ய, பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.