பாப்பான்குளம் தண்டாயுதபாணிசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2019 01:04
உடுமலை:மடத்துக்குளம் ஒன்றியம் பாப்பான்குளத்தில், ஞான தண்டாயுதபாணிசுவாமி கோவில் உள்ளது. சித்திரை திருநாள், ஏப்.,14ம் தேதி துவங்குவதையொட்டி, இக்கோவிலில், சிறப்பு பூஜை நடக்கிறது.அன்று காலை, 5:00 மணிக்கு ஞான தண்டாயுதபாணி சுவாமிக்கு 16 வகையான திரவியங்களில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, சுவாமிக்கு ராஜ அலங்காரத்துடன் காலை, 6:30 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.இதில், பாப்பான்குளம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்கின்றனர்.