பதிவு செய்த நாள்
12
ஏப்
2019
01:04
உடுமலை:உடுமலை, தில்லை நகர் ஆனந்த சாய் கோவிலில், ராம நவமி விழா, ஏப்., 3ம்தேதி முதல் நடக்கிறது. நாள்தோறும், காலை, ஆரத்தி, காலை, 8:00 மணிக்கு அபிஷேக ஆராதனை
மற்றும் காலை, 11:00 மணிக்கு விஷ்ணுசகஸ்ரநாமம் மற்றும் சாய் சத்சரித பாராயணம் நடந்தது.இன்று, மாலை, 7:00 மணிக்கு கோவில் வளாகத்தில் சாய் பஜன் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை, (ஏப்., 13ல்) காலை, 7:45 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு, ராவ நவமியையொட்டி, ஜி.டி.வி., திருமண மண்டபத்தில் சீதாராமர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.மாலை, 5:30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் சீதாராமர் திருவீதி உலா நடக்கிறது.