பதிவு செய்த நாள்
12
ஏப்
2019
02:04
கொடைரோடு:அம்மையநாயக்கனூரில், முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. ஏப். 2ல், கொடியேற்றம் நடந்தது.
கம்பம் வெட்டுதல், கரகம் அழைப்பு சிறப்பு பூஜைகளுடன், கேடயம், பூத்தேர், சிம்மம், காளை, யானை, அன்னம், சேஷ வாகனங்களில் ஊர்வலம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான அக்னிச்சட்டி எடுத்தல், படுகளம், மஞ்சள் நீராடலுடன் அம்மன் பூஞ்சோலை புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.