மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் மலர் சாகுபடி கோவில் நிர்வாகம் முயற்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2019 01:04
மேட்டுப்பாளையம்:காரமடையில் - தோலம்பாளையம் ரோட்டில் அரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நந்தவனம் உள்ளது.
இங்கு ஒரு ஏக்கர் நிலம் தரிசாக போடப்பட்டிருந்தது. அரங்கநாதர் கோவிலில் உள்ள சுவாமிகளுக்கு அலங்காரம் செய்ய வெளியிலிருந்து மாலைகளும், பூக்களும் வாங்கப்படுகின்றன.
கிணற்றிலும் போதிய அளவு தண்ணீர் இருந்தும் கோவில் நிர்வாகம் பூ சாகுபடி செய்யாமல் இருந்து வந்தது. தரிசாக உள்ள நந்தவனத்தில் பூச்செடிகளை வளர்த்தால் கோவிலுக்கு தேவையான பூக்கள் கிடைக்கும் என, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, கோவில் நிர்வாகம் நந்தவனத்தில் மலர் சாகுபடி செய்ய கடந்த வாரம் உழவு செய்துள்ளது. முக்கால் ஏக்கரில் துளசி, அரளி பூ உள்பட பல்வேறு வகையான பூச் செடிகள் இன்னும் ஓரிரு வாரத்தில் நடப்பட உள்ளது.