பதிவு செய்த நாள்
13
ஏப்
2019
01:04
பெ.நா.பாளையம்:வீரபாண்டி பிரிவு, செல்வபுரத்தில் சீரடி சாய்பைரவர் கோவில் உள்ளது. சாய்பாபா பிறந்தநாள் மற்றும்
ஸ்ரீராமநவமியையொட்டி, இன்று (ஏப்., 13ல்) சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இன்று (ஏப்., 13ல்) காலை, 6:30 மணிக்கு அஸ்டோத்திர அர்ச்சனை மற்றும் ஹராத்தியும், 9:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.
தொடர்ந்து, ஸ்தவன மஞ்சரி பாராயணம் நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு ஓம் சாயி, ஸ்ரீ சாயி ஜெய் ஜெய் சாயி எனும் சாயி நாம லட்சார்ச்சனை நடக்கிறது. பகல், 12:00 மணிக்கு உற்சவர் பாபாவுக்கு பால் அபிஷேகமும், தொடர்ந்து பகல் ஹாரத்தியும் நடக்கிறது.பகல், 1:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மதியம், 2:00 மணிக்கு பஜனையும், 6:00 மணிக்கு ஹராத்தியும், 6:40 மணிக்கு ஊர்வலம் நடக்கிறது.