பதிவு செய்த நாள்
13
ஏப்
2019
01:04
உடுமலை:தேர்த்திருவிழாவையொட்டி, குட்டைத்திடலில், கடைகள் அமைப்பதற்கான உரிமம், வருவாய்த்துறையால், 52 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்க்கு, நேற்று (ஏப்., 12ல்) ஏலம்
விடப்பட்டது.உடுமலையில், பிரசித்தி பெற்ற, மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்கு நோன்பு சாட்டப்பட்டுள்ளது.
திருவிழாவையொட்டி, வருவாய்த்துறைக்கு, சொந்தமான, 0.91 ஏக்கர் பரப்புடைய, குட்டைத் திடல் மைதானத்தில், கடைகள் மற்றும் விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்படும்.
இதற்கான தற்காலிக உரிமம் வழங்க, வருவாய்த்துறையால் ஏலம் விடப்படும். இந்தாண்டுக் கான ஏலம், உடுமலை தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் தங்கவேல் தலைமையில் நடந்தது
கடந்தாண்டு, 38 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. அரசு நடைமுறை களின்படி, 10 சதவீதம் கூடுதலாக்கப்பட்டு, குறைந்தபட்ச ஏலத்தொகையாக, 42 லட்ச
ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.ஏலத்தில், பங்கேற்க, 10 லட்சம் ரூபாய், டிபாசிட் கட்ட விதிமுறை நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, 14 பேர் டிபாசிட் தொகை கட்டி, நேற்று ஏலத்தில் பங்கேற்றனர். ஏலம், 42 லட்ச ரூபாய்க்கு துவங்கியது.இறுதியாக, 52 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. கடந்தாண்டை விட, 14 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் கூடுதலாக ஏலம் விடப்பட்டுள்ளது.ஏல நடவடிக்கைகள் அனைத்தும் வருவாய்த் துறையினரால், வீடியோ பதிவு செய்யப்பட்டது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.குட்டைத்திடலில், கடைகள் அமைத்தலுக்கான காலக்கெடு வருவாய் கோட்டாட்சியரிடம் ஆலோசிக்கப்பட்டு, நிர்ணயிக்கப்படும் என
வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.