ஆழ்வார்குறிச்சி :கடையம் முப்புடாதியம்மன் கோயிலில் புதிய முன் மண்டபம் அமைக்க நேற்று பூமி பூஜை நடந்தது. கடையத்தில் வடக்கு ரத வீதியில் மிகவும் பிரசத்தி பெற்ற முப்புடாதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 1937ம் ஆண்டு 62 அடி நீளத்தில் 15 அடி உயரத்தில் 21 அடி அகலத்தில் ஓட்டினால் ஆன மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முப்புடாதியம்மன் பக்தர்கள் பேரவை மற்றும் மண்டகப்படிதாரர்கள், பொதுமக்கள் இணைந்து புதிய மண்டபம் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்க முடிவு செய்திருந்தனர். புதிய கான்கிரீட் மண்டபம் அமைப்பதற்கான பூமி பூஜையை பேரவையினர் மற்றும் பக்தர்கள் மண்டகப்படிதாரர்கள் முன்னிலையில் சுப்பிரமணியபட்டர், குமார்பட்டர், ரவணசமுத்திரம் கிருஷ்ணபட்டர் நடத்தினர். முன்னதாக கோயில் அர்ச்சகர் முத்து விநாயகர், முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடத்தினார்.பூமி பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.