பதிவு செய்த நாள்
06
மார்
2012
11:03
உடுமலை : உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கும்பாபிஷக விழா கடந்த இரண்டாம் தேதி காலை 6.30 மணிக்கு அனுக்ஞை, விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. மகா கணபதி ஹோமம், திரவியாகுதி, மகா பூர்ணாகுதி, தீபாராதனையும்; மாலை 5.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை 3.00 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி, காலை 6.00 மணிக்கு ராஜகோபுர விமானம், விநாயகர், விஸ்வநாதர், விசாலாட்சி, சுப்பிரமணியர், நடராஜர்; தட்சிணா மூர்த்தி, சண்டிகேஸ்வரர், காலபைரவர், நால்வர், சவுரிராஜப்பெருமாள், ஆஞ்சநேயர் மற்றும் கருடாழ்வார் சன்னதி விமான கும்பாபிஷேகம் நடந்தது; கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று இறைவனை தரிசித்தனர். தொடர்ந்து, அலங்கார பூஜை, திருக்கல்யாண உற்சவம், பஞ்ச மூர்த்தி சுவாமிகள் புறப்பாடு, திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.