பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
03:04
கோவை:தமிழ் புத்தாண்டு தினம் நேற்று (ஏப்., 14ல்) பிறந்த நிலையில், பல்வேறு கோவில் களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.ஈச்சனாரி விநாயகர் கோவிலில், சுவாமிக்கு அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மலர்கள் மற்றும் ஆப்பிள், ஆரஞ்சு பழங்களால் ஆன மாலைகள் அணிவிக்கப்பட்டன.புலியகுளம் பெரிய விநாயகர் கோவிலில், விநாயகருக்கு இரண்டு டன் பழங்களால், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.புலியகுளம் மாரியம்மன் கோவில், மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில், கோவை கோனியம்மன் கோவில், ராம்நகர் கோதண்டராமர் கோவில், ஈச்சனாரி மகாலட்சுமி மந்திர் கோவில், ஆர்.எஸ்.புரம் அன்னபூர்னேஸ்வரி கோவில், பாப்பநாயக்கன் பாளையம் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.காட்டூர் மாரியம்மன் கோவில், முத்துமாரியம்மனுக்கு, இரண்டு கோடி ரூபாய் நோட்டுகளால், அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவில்களில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.