பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
03:04
நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில், நேற்று (ஏப்., 14ல்)குருத்தோலை பவனி நடந்தது. நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், நேற்று (ஏப்., 14ல்) காலை, 6:00 மணிக்கு, சிறப்பு கூட்டுப் பாடல் திருப்பலியும், தொடர்ந்து, காலை, 7:00 மணிக்கு, குருத்தோலை புனிதம் செய்யப்பட்டு, பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில், குருத்தோலை பவனியும் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கைகளில் குருத்தோலை ஏந்தி, தேவாலயத்தை ஒட்டிய வீதிகளில், பவனிவந்தனர். இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.