அவலூர்பேட்டை:அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டும், உலக நன்மை வேண்டியும், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.ஓய்வுபெற்ற ஆசிரியர் கள் தட்சணாமூர்த்தி, சிவநேசன் முன்னிலை வகித்தனர். கோவில் மண்டபத்தில் கலசம், அண்ணாமலை, உண்ணாமலை படங்களுக்கு மகா தீபாராதனை செய்து, சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதினர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கிராம மக்கள், மரம் நடுவோர் சங்கம் மற்றும் வள்ளலார் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.