பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
03:04
விழுப்புரம்:விழுப்புரம் எம்.ஜி., ரோடு-கே.கே ரோடு நான்குமுனை சந்திப்பில் உள்ள வீரவாழியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா, இன்று 15ம் தேதி காலை 9.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன், துவங்குகிறது. நாளை 16ம் தேதி காலை 8.30 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, மாலை 5.00 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜை நடக்கிறது. 17ம் தேதி காலை 6.00 மணிக்கு மங்கள இசையுடன் 4ம் காலயாக பூஜை, அம்மன் மற்றும் பரிவாரங்களுக்கு ரக்ஷாபந்தனம், தத்வார்ச்சனை, 9.00 மணிக்கு பூர்ணாஹூதி, 9.15 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.காலை 9.30 மணிக்கு யாத்ரா தானம்-கடம் புறப்பாடு முடிந்து, 10.00 மணிக்கு விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், 10.15 மணிக்கு மூலவருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து, மகா அபிஷேகம், 10.30 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது.சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி, வரும் 18ம் தேதி கலச ஸ்தாபனம், 19ம் தேதி காலை 7.30 மணிக்கு பால் காவடிகள் புறப்பாடு, பகல் 12.00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 20ம் தேதி 1008 சங்காபிஷேகம், 21ம் தேதி இடும்பன் பூஜை நடக்கிறது.