பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
04:04
கிருஷ்ணராயபுரம்: கருப்பத்தூர் ஐயப்பன் கோவிலில், சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நடை திறக்கப்பட்டு விஷூ கனி தரிசனம் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்தூர் ஐயப்பன் கோவிலில், நேற்று (ஏப்., 14ல்) காலை சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு பிறப்பு முன்னிட்டு, காலை, 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. ஐயப்பனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்து மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு விஷூ கனி தரிசனம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் லாலாப்பேட்டை, கரூர், குளித்தலை, ஆகிய பகுதிகளில் இருந்து, 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.