கிருஷ்ணராயபுரம் பிடாரி அம்மன் கோவிலில் தேர்த்திருவிழா கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2019 04:04
கிருஷ்ணராயபுரம்: மேட்டுமகாதானபுரம், ஏழூர் பிடாரி அம்மன் கோவிலில், சித்திரை தேர்த் திருவிழா நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டு மகாதானபுரத்தில், ஏழூர் பிடாரி, பள்ளபடச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆண்டுந்தோறும் சித்திரை மாதம் தேர்த் திருவிழா கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். கோவில் தேரோட்டம் இன்று (ஏப்., 15ல்) நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், பிடாரி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.