Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை சித்திரை திருவிழாவில் ... திருவேடகம் ஏடகநாத சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவிலில் பெருந்திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2019
02:04

அலங்காநல்லூர்:அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா நேற்று துவங்கியது. நாளை (ஏப்., 17) மாலை மதுரை வைகையாற்றில் இறங்க கள்ளழகர் வேடத்தில் அழகர் புறப்படுகிறார்.

கள்ளழகர் எழுந்தருளும் தங்கக்குதிரை வாகனம் நேற்று மதுரை புறப்பட்டது.சித்திரை திருவிழாவையொட்டி நேற்று (ஏப்., 15) மாலை மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று (ஏப்., 16) மாலை சுவாமி புறப்பாடு நடக்கிறது. நாளை (ஏப்., 17ல்) மாலையில் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வேடத்தில் பெருமாள் மதுரை புறப்பட்டு செல்கிறார்.நேற்று (ஏப்., 15ல்) அழகர்கோவிலில் இருந்து தங்கக்குதிரை, சேஷ மற்றும் கருட வாகனங்கள் தனித்தனியாக லாரிகளில் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வைகையாற்றில் இறங்கும் கள்ளழகருக்காக தங்கக்குதிரை வாகனம் தல்லாகுளம் பெருமாள் கோயில், கருட வாகனம் தேனூர் மண்டபம், சேஷவாகனம் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலுக்கும் செல்கின்றன.

பக்தர்கள் காணிக்கை செலுத்த ஏதுவாக 27 உண்டியல்கள் பெருமாளுடன் மதுரை செல்லவுள்ளன. வழிநெடுகிலும் அமைக்கப்பட்டுள்ள 445 மண்டகபடிகளில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். ஏப்., 18 காலை 6:00 மணிக்கு மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது. ஏப்., 19 அதிகாலை 5:45 முதல் காலை 6:15 மணிக்குள் தங்கக்குதிரையில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருள்வார். ஏப்., 20 சேஷவாகனத்தில் வண்டியூர் வீரராகவபெருமாள் கோயிலில் கள்ளழகர் எழுந்தருள்வார்.தேனூர் மண்டபத்தில் கருடவாகனத்தில் பிரசன்னமாகி கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாபம் நீக்கி மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கும். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 21 இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் சுவாமி பூப்பல்லக்கில் காட்சியளிப்பார். ஏப்., 22 அங்கிருந்து புறப்பாடாகி இரவு அப்பன் திருப்பதியில் எழுந்தருள்வார். ஏப்., 23 காலை அழகர்கோவிலுக்கு கள்ளழகர் திரும்புவார். விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar