பதிவு செய்த நாள்
17
ஏப்
2019
02:04
உடுமலை : உடுமலை, அற்புத அன்னை ஆலயத்தில் தவக்காலம், திருப்பலி நிகழ்ச்சி நடக்கிறது. தளி ரோடு அற்புத அன்னை ஆலயத்தில், தவக்காலம் மார்ச் 6 ம்தேதி முதல் நடக்கிறது. ஐந்து வாரங்களைத் தொடர்ந்து, நாளை, (18 ம்தேதி) பெரிய வியாழன் தினத்தையொட்டி, பாதம்கழுவும் சடங்கு, நற்கருணை இடமாற்றம், ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள், மாலை, 6:30 மணிக்கு துவங்கி, இரவு, 12:00 மணி வரை நடக்கிறது. தொடர்ந்து, 19 ம் தேதி பெரிய வெள்ளியன்று, காலை, 7:00 மணி முதல் ஆராதனை, காலை, 11:00 மணிக்கு பெரிய சிலுவைப்பாதை நிகழ்ச்சியும் நடக்கிறது.