பதிவு செய்த நாள்
18
ஏப்
2019
03:04
கோவை:கோவையில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவிலில் நடந்து வரும் சித்திரை திருவிழாவில் இன்று (ஏப்., 18ல்)அக்னிசாட்டு நடக்கிறது.
அவிநாசி ரோடு மேம்பாலம் அருகில் உள்ள, தண்டுமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா, கடந்த 15ல் துவங்கி நடந்து வருகிறது. இன்று (ஏப்., 18ல்) மாலை, 6:30 மணிக்கு, அக்கினி சாட்டும், நாளை (ஏப்., 19ல்) மாலை, 6:30 மணிக்கு, திருவிளக்கு வழிபாட்டை தொடர்ந்து, வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன்
வீதியுலாவும் நடக்கிறது.