நவரத்தின மோதிரம் அணி வதைப்பற்றி விளக்கம் அளியுங்கள்..
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2012 04:03
மோதிரத்திற்கு அங்குலீயகம் என்று பெயர். இதற்கு விரலுக்கு அணிவிக்கப்படும் ஆபரணம் என்று பொருள். எல்லா தெய்வங்களுக்கும் எல்லாக் கற்களும் உகந்தவை தான். சுவாமியை பிரதிஷ்டை செய்யும் முன் பீடத்தில் நவரத்தினங்கள் வைக்கப்படுகின்றன. கும்பாபிஷேக கலசம், திருவாபரணங்களிலும் இவற்றுக்கு முக்கியத்துவம் உண்டு. அவரவர் விரும்பும் கற்களில் விருப்பமான முறையில் மோதிரம் அணிந்து கொள்ளலாம். அவை தீங்கு ஏதும் விளைவிக்காது. சுவாமி முன்பு வைத்து வணங்கியபிறகு அணிந்து கொள்ளுங்கள்.