பழைய கோயில்களை பாதுகாக்க முடியாமல் தவிக்கிறோம், இருந்தாலும் புதிய கோயில்களைக் கட்டுவது ஒரு வியாபார உத்திதானே?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2012 04:03
எல்லோரையும் அப்படிச் சொல்லிவிட முடியாது. முன்பிருந்த மக்கள் தொகை, அவர்களின் வாழ்க்கை முறை என்பது வேறு. தற்போதுள்ள மக்கள் தொகை, அவர்களின் வாழ்க்கை முறை என்பது வேறு. முன்பு ஒரு கோயிலைச் சுற்றி ஓரு ஊர் அமைந்திருக்கும். இன்று மக்கள் தொகை பெருகி புதிது புதிதாக நகர்களும் ஊர்களும் பெருகிக் கொண்டே வருகின்றன. அவசரமான, பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இருப்பவர்கள் தொலை தூரம் சென்று கோயிலை தரிசிக்க இயலாமல் போய் விடுகிறது. எனவே அப்பகுதியில் வாழும் மக்கள் தினமும் தரிசித்து வழிபட தங்கள் பகுதிக்கென்று ஒரு கோயிலை அமைத்துக் கொள்வது இன்றியமையாததாகிறது.