விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2025 11:07
திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்ட விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திண்டுக்கல் மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோயிலில் காலை 7:00 மணிக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. திண்டுக்கல் கோபாலசமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோயில் , திண்டுக்கல் ரெயிலடி சித்தி விநாயகர், சவுராஷ்டிராபுரம் விநாயகர், வாணிவிலாஸ் மேடு கலைக்கோட்டு விநாயகர், ரவுண்ட்ரோடு கற்பக விநாயகர், கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
செம்பட்டி: கோதண்டராம விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.
சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.