பதிவு செய்த நாள்
20
ஏப்
2019
01:04
மோகனூர்: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, நாகப்புற்று கருமாரியம்மன் சுவாமிக்கு, பால்குட அபி ?ஷகம் நடந்தது. மோகனூர் வள்ளியம்மன் கோவில் அருகில், பெரியார் நகரில், நாகப்புற்று கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு கணபதி ?ஹாமம், 7:00 மணிக்கு, பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்றனர். அங்கு, அம்மனுக்கு பூங்கரகம் பாலிக்கப்பட்டு, பால், தீர்த்தக் குடம் ஊர்வலம் வந்தது. காலை, 11:00 மணிக்கு, அபி ?ஷகம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர் ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுவினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.