பதிவு செய்த நாள்
20
ஏப்
2019
01:04
புன்செய்புளியம்பட்டி: காமாட்சியம்மன் கோவில் சித்திரை விழாவை முன்னிட்டு, அலகு குத்தி, தேர் இழுத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். புன்செய்புளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற, காமாட்சியம்மன் கோவிலில் நடப்பாண்டு சித்திரை விழா, 15ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு, அன்னமடம்-முத்துப்பிள்ளையார் கோவிலில் இருந்து படைக்கலத்துடன் தீர்த்தகுடம் எடுத்து அம்மை அழைத்தல் நடந்தது. நேற்று காலை, காமாட்சியம்மன்-ஏகம்பரநாதர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மதியம், அரண்மனை பொங்கல் வைபவம், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, பக்தர்கள், அலகு குத்தி தேர் இழுத்தனர். ஊர்வலமானது, காமாட்சியம்மன் கோவிலில் துவங்கி நம்பியூர் சாலை, கோவை பிரதான சாலை, பவானிசாகர் சாலை வழியாக காமாட்சியம்மன் கோவிலை அடைந்தது. இன்று ஞ்சள் நீராட்டு விழா, 22ல் மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.