பதிவு செய்த நாள்
07
மார்
2012
11:03
திருச்செந்தூர் : திருச்செந்தூர் மாசி திருவிழா தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் நடந்தது. தமிழ் கடவுள் முருகபெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டு முழுவதும் பல திருவிழாக்கள் நடந்து வருகிறது. இந்த திருவிழாக்களில் முக்கியமான மாசி பெருந்திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி அம்பாளுடன் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஐந்தாம் திருநாளன்று மேலக்கோயிலில் குடவருவாயில் தீபாராதனை நடந்தது. ஏழாம் திருநாளன்று சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். எட்டாம் திருநாளன்று அதிகாலை 5.30 மணியளவில் சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்திலும், மாலை பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம் திருநாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் காலை 7.40 மணிக்கு விநாயகர் தேர் புறப்பட்டு 8.10 மணிக்கு நிலை வந்தடைந்தது. 8.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாக பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடிக்க தேர் காலை 10.15 மணிக்கு நிலை வந்தடைந்தது. தொடர்ந்து தெய்வானை அம்மன் தேரில் காலை 10.35 மணிக்கு எழுந்தருளி நான்கு ரதவீதி பவனி வந்து 11.30 மணிக்கு நிலை வந்து சேர்ந்தார். நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன், எம்பி.,ஜெயதுரை, தொழிலதிபர்கள் ராமச்சந்திர ஆதித்தனார், சிவந்தி ஆதித்தனார், பாலசுப்பிரமணிய ஆதித்தன், கண்ணன் ஆதித்தன், தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில துணை தலைவர் அரிஹரமுத்துஅய்யர், ரமணி, சங்கரசுப்பிரமணியன், வேல்குமார் கார்மெண்ட்ஸ் ராதாகிருஷ்ணன், வீரபாகு மஹால் வீரபாகு, சக்தி ஸ்வர்ணா, ராமகிருஷ்ணன், தர்மராஜா, அண்ணாமலை செந்தில்வேலவன், குமரேசஆதித்தன், திருச்செந்தூர் டவுன் பஞ்.,தலைவர் சுரேஷ்பாபு, யூனியன் சேர்மன் ஹேமலதா லிங்ககுமார், அதிமுக.,ஒன்றிய செயலாளர் ராமசந்திரன், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் லிங்ககுமார், யூனியன் துணை தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய குழு உறுப்பினர் கண்ணன், அதிமுக.,கவுன்சிலர் லெட்சுமணன், தேமுதிக., ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், தேமுதிக.,முன்னாள் மாவட்ட செயலாளர் கோமதிகணேசன், நகர செயலாளர் சேகர், நகர தலைவர் ராமன், நகர பொருளாளர் பள்ளத்தெரு வீரமணி, நகர துணை செயலாளர்கள் பூக்கடை முருகன், தாமோதரலிங்கம், விநாயகம், ஒன்றிய அவைத் தலைவர் பூச்சிக்காடு சுரேஷ், ஒன்றிய துணை செயலாளர் சுரேஷ், ஒன்றிய கேப்டன் மன்ற செயலாளர் சிவராஜ், பொதுக்குழு உறுப்பினர் துர்க்கா, செந்தூர் ஆப்செட் சுப்பிரமணியன், சாந்தா டிஜிட்டல், ராஜா, தங்கவேல், கசமுத்து, காங்.,மாவட்ட செயலாளர் ஐந்து கோடி அரிஹரன், தக்கார் உதவியாளர் நாகராஜன், கோயில் உதவி ஆணையர் செல்லத்துரை, அலுவலக கண்காணிப்பாளர் செல்வக்குமாரி, கண்காணிப்பாளர்கள் வெங்கடேஷன், ராமசாமி, சுப்பையன், அபிராமி ராஜேஷ், காவேரி தங்கராஜ் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் டிஎஸ்பி ஞானசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் இசக்கி, பிரதாபன், ராஜாமணி உட்பட 300 போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் செய்திருந்தனர். டவுன் பஞ்.,நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக நகரின் முக்கிய இடங்களில் தண்ணீர்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்செந்தூருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இன்று இரவு தெப்பத் திருவிழா நடக்கிறது. தெப்பத்தில் சுவாமி குமரவிடங்கபெருமாள் தெப்பத்தில் அமர்ந்து 11முறை வலம் வந்து தெப்பதேரோட்டம் நடக்கிறது. நாளை 12ம் திருநாளை முன்னிட்டு சுவாமி மஞ்சள் நீராட்டு கோலத்துடன் எட்டுவீதியும் வலம் வந்து வடக்கு ரதவீதி மண்டகபடி வந்து சேர்கிறார். அங்கு அபிஷேகம் தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் செல்லத்துரை, அலுவலக கண்காணிப்பாளர் செல்வகுமாரி, வெங்கடேஸ்வரன், ராமசாமி, சுப்பையன் ஆகியோர் செய்திருந்தனர்.