பதிவு செய்த நாள்
23
ஏப்
2019
02:04
ஓமலூர்: மகாமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், நேற்று (ஏப்., 23ல்) இரவு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. ஓமலூர், காமலாபுரத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில், கடந்த, 15ல், பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா துவங்கியது. நேற்று (ஏப்., 23ல்) இரவு, 9:00 மணிக்கு கம்பம் நடும் விழா நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மூலவர் அம்மன், வெள்ளி முகத்துடன் அருள்பாலித்தார். வரும், 30ல், இரவு சக்தி அழைத்தல், மே,1ல் மாவிளக்கு, உருளுதண்டம், சக்தி அழைத்தல், மே, 2ல், வண்டிவேடிக்கை, 3ல், சத்தாபரணம் நடக்கிறது.