பதிவு செய்த நாள்
23
ஏப்
2019
02:04
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் அடுத்த ஒட்டம்பட்டு கிராமத்தில் நாளை (ஏப்., 24ல்) ஆதிகூத்தாண்ட வர் திருத்தேரோட்டம் நடக்கிறது.
திருக்கோவிலூர் அடுத்த ஒட்டம்பட்டு கிராமத்தில் ஆதிகூத்தாண்டவர் கோவில் 4ம் ஆண்டு திருவிழா இன்று (ஏப்., 23ல்)துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது.இரவு கரகம், கூத்தாண்டவர் திருமண கோலத்தில், இந்திர விமானத்தில் வீதி உலா நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (ஏப்., 24ல்)காலை 9 மணிக்கு, கூத்தாண்டவர் யுத்தகோலத்தில், பெரும் தேர்பவனியில் எழுந்தருளி, முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். மாலை தேர் நிலையை அடைந்தவுடன், களபலி உற்சவம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு சுவாமி இந்திர விமானத்தில் காட்டு கோவிலுக்குச் செல்லும் வைபவம் நடக்கிறது்.தொடர்ந்து 30ம் தேதி மாலை 5 மணிக்கு காட்டுகோவிலில் தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.