ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் பைரவருக்கு ருத்திராட்சம், விபூதி அபிஷேகம் செய்து, வடை மாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும். அதேபோல், ஆறு தேய்பிறை அஷ்டமியில் சிவப்பு அரளி மாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து பைரவரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வறுமை நீங்க; வெள்ளிக்கிழமை மாலையில் வில்வ இலை, வாசனை மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.