பதிவு செய்த நாள்
24
ஏப்
2019
02:04
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவ பெருமாள் தேர் திருவிழா, நாளை (ஏப்., 25 ல்) நடைபெறுகிறது.
ஸ்ரீபெரும்புதூரில், வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, 19ம் தேதி, ஆதிகேசவர் உற்சவ விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் ஒரு வாகனத்தில், ஆதிகேசவர் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான, திருத்தேர் விழா, நாளை (ஏப்., 25ல்) நடைபெற உள்ளது. இதற்காக, தேரை தூய்மைப்படுத்தும் பணிகள் நடக்கின்றன.
நவம்பர் மாதம், தேரின் நான்கு மரச்சக்கரங்களும் மாற்றப்பட்டு நவீன இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டு, முதல் முறையாக, ஸ்ரீபெரும் புதூரில் தேர் பவனி செல்ல உள்ளதால், பக்தர்கள் தேர் திருவிழாவை, உற்சாகத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.