கம்மாபுரம் : சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கம்மாபுரம் அடுத்த இருப்பு பிடாரி அரசியம்மன், புஷ்ப அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விழாவை முன்னிட்டு, கடந்த 13ம் தேதி கொடியேற்றமும், காப்புகட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. தினசரி, காலை மாலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், 10ம் நாள் உபயதாரர் சார்பில் இரவு 9:00 மணியளவில் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும் நடந்தது.வரும் 27ம் தேதி இரவு 10:00 மணியளவில் அம்மன் திருக்கல்யாணம், இரவு 11:00 மணியளவில் புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலா நடக்கிறது. 28ம் தேதி காலை 5:00 மணிக்கு செடல் உற்சவம் ஆரம்பம். மாலை 4:00 மணிக்கு அம்மன் திருத்தேர் உற்சவம் நடக்கிறது.