பதிவு செய்த நாள்
24
ஏப்
2019
02:04
கம்மவார்பாளையம்: ராம நவமியை முன்னிட்டு, வேணுகோபால சுவாமி கோவிலில், ராமருக்கு திருக்கல்யாணம் நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, கம்மவார்பாளையம் கிராமத்தில், வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், ராம நவமியை முன்னிட்டு, 10 நாள் திருவிழா நடக்கும். கடைசி நாளில், ராமருக்கும், சீதைக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கும். நடப்பாண்டு திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, விநாயகர் கோவிலில் இருந்து சீர் வரிசை எடுத்து வரப்பட்டது. இரவு, 10:30 மணிக்கு ராமருக்கும், சீதைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு, மலர் அலங்காரத்தில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் சுவாமிகளின் வீதியுலா நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.