பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவிலில் பாம்பின் விஷம் நீக்கும் ஐதீக நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2019 02:04
பண்ருட்டி:திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அப்பூதியடிகளின் மகனுக்கு பாம்பின் விஷம் நீக்கிய ஐ தீக நிகழ்ச்சி நடந்தது. பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருநாவுக்கரசு சுவாமிகளின் சதய உற்சவ விழா கடந்த 20ம் துவங்கி நடந்து வருகிறது. கடந்த 22ம் தேதி இரவு திருநாவுக்கரசர் எனும் அப்பர் சுவாமிகளை கருங்கல்லில் கட்டி கடலில் வீசி எறிதல், அந்த கல்லையே தெப்பமாக்கி திருநாவுக்கரசர் கரையேறிய நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் 23ம் தேதி பெண்ணாகடத்து திருத்தூங்கானை மாடத்தில் திருவிலகச்சினை பெறுதல், திருச்சத்திமுற்றத்தில் திருவடி சூட்ட விண்ணப்பித்த நிகழ்வு நடந்தது. நேற்று 24 ம்தேதி திலகவதியார் நந்தவனத்திற்கு திருநாவுக்கரசர் எழுந்தருளி, அப்பூதி அடிகளின் மகனுக்கு பாம்பின் விஷம் நிக்கிய ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் திருநாவுக்கரசு சுவாமி அருள்பாலித்தார்.
இன்று 25ம் தேதி திருநாவுக்கரசர் மகேஸ்வர பூஜை, நாளை 26ம் தேதி மறைகதவு திருப்பித் தருளிய நிகழ்ச்சி, 27ம் தேதி சமணர்களால் மறைத்த சிவலிங்க பெருமானை வெளிப்படுத்தி வணங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.வரும் 28 ம் தேதி திருபைஞ்சலியில் சிவபெருமான் பொதிசோறு தந்து வழிகாட்டிய நிகழ்ச்சி, 29ம் தேதி திருபுகளூரில் திருநாவுக்கரசர் முக்தி அடைதல் நிகழ்ச்சி நடக்கிறது.