கடலூர்:திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சித்திரை திருவிழா துவங்கி நடந்து வருகிறது.
திருப்பாதிரிப்புலியூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 23ம் தேதி துவங்கிய சித்திரை திருவிழா அடுத்த மாதம் 5ம் தேதி வரை நடக்கிறது. திருவிழாவின்போது, ஆஞ்சநேயருக்கு காலையில் திருமஞ்சனம், தீபாராதனை, இரவு சுவாமி வீதியுலா காட்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.