பதிவு செய்த நாள்
26
ஏப்
2019
02:04
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் கடந்த, 19ல், சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும், சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.
பின்னர், தினமும் வெவ்வேறு வாகனங்களில் அலங்கரித்து இரவு நேரங்களில் வீதி உலா நடந்தது. கடந்த, 23ல், திருக்கல்யாணம், கருட சேவை நடந்தது. விழாவில், நேற்று (ஏப்., 25ல்) தேரோட்டம் நடந்தது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன், தேரோட்டம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.