பதிவு செய்த நாள்
27
ஏப்
2019
12:04
உடுமலை: உடுமலை, மாரியம்மன் கோவிலில் தேரோட்டத்தையடுத்து, அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.உடுமலையில் மாரியம்மன் கோவில் திருவிழாவின், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்றுமுன்தினம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தை வழிபட்டு மகிழ்ந்தனர்.நேற்று, காலையில், அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம் அலங்காரமும், தொடர்ந்து, அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
மாலையில் மாரியம்மனுக்கு மூலமந்திர திரிசதி அர்ச்சனை நடந்தது. இன்று, திருவிழாவின் நிறைவாக, காலை, 11:30 மணிக்கு மகாஅபிேஷகம், மதியம், 12:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.இரவு, 7:00 மணிக்கு, அம்மன் புஷ்ப பல்லக்கில், பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, குட்டைத்திடல், போலீஸ் ஸ்டேஷன் ரோடு, தங்கம்மாள் ஓடை பகுதிகளின் வழியாக திருவீதி உலா நடக்கிறது.4,554 பேர் பூவோடு எடுத்து வழிபாடுஉடுமலை, மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழாவில் கொடியேற்றப்படும் நாளன்று பூவோடு நிகழ்ச்சியும் துவங்கியது. நடப்பாண்டில், கோவிலில் அதிகாலை முதல் பூவோடு எடுக்கும் பக்தர்கள் குவிந்தனர். தொடர்ந்து, ஐந்து நாட்களும், பக்தர்கள் பூவோடு எடுத்தனர். நடப்பாண்டில், 4554 பக்தர்கள் பூவோடு எடுத்து வழிபட்டுள்ளனர். பக்தர்கள் பாதுகாப்புடன் எடுத்து செல்ல சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.