பதிவு செய்த நாள்
27
ஏப்
2019
02:04
கிருஷ்ணகிரி: பர்கூர் ஒன்றியம் முருக்கம்பள்ளத்தில், திரவுபதி அம்மன் கோவிலில், 45வது மகாபாரத மகோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை தொடர்ந்து திரவுபதி
அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.
இதில் முருக்கம்பள்ளம், பாலேப்பள்ளி, எலத்தகிரி, மாதனகுப்பம், வெண்ணம்பள்ளி, ஜோடுகொத்தூர் உள்ளிட்ட, 18 கிராம மக்கள் இணைந்து, திரவுபதி அம்மனுக்கு சீர் வரிசை தட்டுகளுடன் பங்கேற்றனர்.
திருக்கல்யாணத்தையொட்டி, அம்மன் பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கணபதி பூஜையுடன், திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் மங்கள
வாத்தியம் முழங்க நடந்தது.