அலங்காநல்லுார்: பாலமேடு அருகே சத்திரவெள்ளாளபட்டி காளியம்மன் கோயில் சித்திரை திருவிழா மூன்று நாட்கள் நடந்தன. முதல் நாள் அம்மன் கரகம் அலங்கரித்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அன்றிரவு அங்குள்ள குன்றின் மீது அம்மன் கிரிஜோதி ஏற்றப்பட்டது. 2ம் நாள் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் எடுத்து சென்றனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தன. பக்தர்கள் பால்குடம், அக்கினிசட்டி எடுத்தனர். மூன்றாம் நாளான நேற்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுதல், திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.